Kiraga Prarchia Palangal

Gemology

Services

நினைத்தது கைக்கூட கணபதி ஹோமம், ஜாதக தோஷம் நீங்க நவக்கிரக ஹோமம், வாஸ்து தோஷம் நீங்க வாஸ்து ஹோமம், செல்வ வளம் பெருக மஹா லக்ஷ்மி ஹோமம், பில்லி, சூனியம், பயம் நீங்க, திருஷ்டி விலக, கடன் தீர சுதர்சன ஹோமம், ஆரோக்கியமாக வாழ, வியாதி தீர தன்வந்திரி ஹோமம், யம பயம் நீங்க ம்ருத்யுஞ்ஜய ஹோமம், ஆயுள் அபிவிருத்தி அடைய ஆயுஷ்ய ஹோமம், நக்ஷத்திரம் பலம் பெற நக்ஷத்திர ஹோமம், கல்வியில் சிறந்து விளங்க, கீர்த்தி பெற மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம், வியாபாரம் அபிவிருத்தி அடைய, லாபம் பெற குபேர லட்சுமி ஹோமம், திருமண தோஷம் நீங்க, கல்யாணம் கைகூட சுயம்வரா பார்வதி ஹோமம், லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம்.

Horoscope

குருபெயர்ச்சிபலன்கள்

கன்னி ராசிக்கு வெற்றி மீது வெற்றி தான்! மற்றவர்களுக்கு

வாங்க, பார்க்கலாம்!

குரு பகவான் ஒன்றேகால் ஆண்டிற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்குப் பெயர்ச்சி ஆவார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் பெயர்ச்சிகளில் குரு பெயர்ச்சியும் ஒன்று. இந்த ஆண்டிற்கான குரு பெயர்ச்சியை நாம் விரைவில் சந்திக்க இருக்கிறோம்!

15/11/2020 அன்று இரவு 09:48 மணிக்கு தனுசு இராசியில் இருந்து மகர இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படப்போகும் பொதுவான குரு பெயர்ச்சி பலன்களை உங்களுக்காக வழங்குகிறார் யோகஸ்ரீ ஜோதிட நிலையத்தை நடத்தி வரும் பிரசன்ன ஜோதிடர் M.S. சேதுராம்.

மேஷ_ராசி

மேஷ_ராசி

மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கான பொதுப்பலன்களை இன்று காண்போம்!

முதல் ராசியாக விளங்கும் மேஷராசி நேயர்களே!

குரு பார்க்க கோடி நன்மை... தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தையும் அங்கு இருக்கும் ராகுவையும் பார்க்க விருப்பதால் அந்த ஸ்தானபலம் அதிகரிக்கும்.

எனவே நேர்மறையாக பேசுங்க. லட்சியம் நிறைவேறும். குரு கடகம் ராசியை நேர் கொண்ட பார்வையாக பார்க்கயிருப்பதால் சுகம் வாகன யோகம் .வசதிகள் பெருக்கி கொள்ளும் நேரமிது. கன்னி ராசியை குரு பார்க்க போவதால் எதிரி கடன் நோய் தொல்லைகள் வெகுவாக குறையலாம்

ரிஷப_ராசி

ரிஷப_ராசி

ஸ்ரீகிருஷ்ண பகவானின் ராசியான ரிஷப ராசி நேயர்களே!

குரு பார்வையால் உங்க ஜென்ம ராசியையும் ராசியில் இருக்கும் ராகுவையும் பார்க்க போவதால் அனாயாசமான தன்னம்பிக்கை வரும் . எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் பிறக்கும்.

தன் உச்ச வீடான கடக ராசியையும் குரு பார்க்கயிருப்பதால் எடு்த்த மற்றும் எடுக்க போகும் முயற்சிகள் நல்லதொரு முடிவுகளை தரும்.

குரு தன் 9 வது பார்வையால் உங்க ராசியின் பஞ்சம ஸ்தானத்தைப் பார்க்கப் போவதால், புத்திக் கூர்மை அதிகரித்து செய்யும் செயல்களில் வித்தியாசமாக யோசிக்க வைத்து எதிர்பார்த்த விசயங்களை விரைவாக, சாதகமாக முடித்து வைப்பார்

மிதுன_ராசி

மிதுன_ராசி

மிதுன ராசி நேயர்களே!

குரு தன் நேர் கொண்ட சம சப்தம பார்வையால் தன் உச்ச வீடான கடக ராசியை பார்த்து தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தை செம்மை படுத்துவதால் நேர்மறையான பேச்சுகள் உயர்ந்த நிலைக்கு வித்திடும்.

குடும்பத்தில் நீண்ட காலத்திற்க்கு பிறகு நிம்மதியும் அமைதியும் நிலவும்

புதிய வாகனச் சேர்க்கைக்கான அமைப்பு உருவாகும். இப்போது இருப்பதை விட வாழ்க்கைத்தரம் உயரும்.

இதெல்லாம் விட இதுவரை தடைகளைக் கொடுத்த பல விசயங்கள் முடிவுக்கு வரலாம்.

கடக_ராசி

கடக_ராசி

விடாப்பிடியாகச் செயல்படும் கடக ராசி நேயர்களே!

12 வருடங்களுக்கு பிறகு குரு சம சப்தம ஸ்தானத்தில் அமர்ந்து அவரின் நேர் கொண்ட பார்வையில் கடக ராசி . கடகம் அவரின் உச்ச வீடென்பதால் மிகவும் சாதகமான பலன்களே நடக்க வாய்ப்புகள் அதிகம்.

லாபத்தில் இருக்கும் ராகுவை குரு பார்க்க இருப்பதால் வளர்ச்சி ஒன்றே உங்களின் தாரக மந்திரமாக இருக்கும்.

அதீத தன்னம்பிக்கை வரும்.

சில காலங்களாக இருந்த மன கிலேசம் காணாமல் போய மனோ தைர்யம் பிறக்கும். இதனால உடல் ரீதியாக புத்துணர்வு வரும்...

சிம்ம_ராசி

சிம்ம_ராசி.

துணிச்சல் மிக்க சிம்ம ராசி நேயர்களே!

தொழில் மற்றும் வேலையில் மிக சிறந்ததொரு ஏற்றங்கள் வரலாம். வியாபாரத்தை விஸ்தீரணம் செய்யவும் வாய்ப்புகள் உருவாகலாம். எதிர்பாராத பதவி கிடைக்கலாம்.

உங்க பேச்சை கேட்க தானா சேர்ந்த கூட்டம் காத்திருக்கு. உபயோகித்துக்கொள்ளவும். மிக நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.. ரொம்ப நாட்களாக இழந்தது அது தான்.

கன்னி_ராசி

கன்னி_ராசி

மென்மையான கன்னி ராசி நேயர்களே!

குரு பார்வை படும் அனைத்து ஸ்தானங்களும் அற்புதம்.

பாக்ய ஸ்தானத்தில் இருக்கும் ராகுவை குரு பார்க்க போவதால் அதிர்ஷ்டம் வீட்டு கதவை தட்டும்.

குரு தன் சிறப்பான நேர் கோண்ட பார்வையால் தன்னுடைய உ்ச்ச ராசியை பார்த்து செம்மை படுத்துவதால் எதிலும் வெற்றியை நோக்கிய லட்சியங்கள் நிறைவேறும்.

குரு உங்க ராசியை பார்ப்பதால் தாழ்வு மனப்பான்மை நீங்கும் .

துலா_ராசி

துலா_ராசி முதல் மீனம் வரை

துலாம் முதல் மீனம் வரை அடுத்த பதிவில் இடம்பெறும். இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் செய்து விட்டுக் காத்திருங்கள்! பதிவிட்ட மறு விநாடி பலன்கள் உங்களைத் தேடிவரும்!