குருபெயர்ச்சிபலன்கள்

Gemology

Services

நினைத்தது கைக்கூட கணபதி ஹோமம், ஜாதக தோஷம் நீங்க நவக்கிரக ஹோமம், வாஸ்து தோஷம் நீங்க வாஸ்து ஹோமம், செல்வ வளம் பெருக மஹா லக்ஷ்மி ஹோமம், பில்லி, சூனியம், பயம் நீங்க, திருஷ்டி விலக, கடன் தீர சுதர்சன ஹோமம், ஆரோக்கியமாக வாழ, வியாதி தீர தன்வந்திரி ஹோமம், யம பயம் நீங்க ம்ருத்யுஞ்ஜய ஹோமம், ஆயுள் அபிவிருத்தி அடைய ஆயுஷ்ய ஹோமம், நக்ஷத்திரம் பலம் பெற நக்ஷத்திர ஹோமம், கல்வியில் சிறந்து விளங்க, கீர்த்தி பெற மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம், வியாபாரம் அபிவிருத்தி அடைய, லாபம் பெற குபேர லட்சுமி ஹோமம், திருமண தோஷம் நீங்க, கல்யாணம் கைகூட சுயம்வரா பார்வதி ஹோமம், லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம்.

Horoscope

குருபெயர்ச்சிபலன்கள்

குரு பகவான் 15/11/2020 அன்று இரவு 09:48 மணிக்கு தனுசு இராசியில் இருந்து மகர இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சி இராசி பலன்கள்

மேஷ_ராசி

மேஷ_ராசி

குரு பார்க்க கோடி நன்மை... தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தையும் அங்கு இருக்கும் ராகுவையும் பார்க்க விருப்பதால் அந்த ஸ்தானபலம் அதிகரிக்கும். .. நேர்மறையாக பேசுங்க. லட்சியம் நிறைவேறும். குரு கடகம் ராசியை நேர் கொண்ட பார்வையாக பார்க்கயிருப்பதால் சுகம் வாகன யோகம் .வசதிகள் பெருக்கி கொள்ளும் நேரமிது. கன்னி ராசியை குரு பார்க்க போவதால் எதிரி கடன் நோய் தொல்லைகள் வெகுவாக குறையலாம்

ரிஷப_ராசி

ரிஷப_ராசி

குரு பார்வையால் உங்க ஜென்ம ராசியையும் ராசியில் இருக்கும் ராகுவையும் பார்க்க போவதால் அனாயாசமான தன்னம்பிக்கை வரும் . எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் பிறக்கும்.. தன் உச்ச வீடான கடக ராசியையும் குரு பார்க்கயிருப்பதால் எடு்த்த மற்றும் எடுக்க போகும் முயற்சிகள் நல்லதொரு முடிவுகளை தரும்.

மிதுன_ராசி

மிதுன_ராசி

குரு தன் நேர் கொண்ட சம சப்தம பார்வையால் தன் உச்ச வீடான கடக ராசியை பார்த்து தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தை செம்மை படுத்துவதால் நேர்மறையான பேச்சுகள் உயர்ந்த நிலைக்கு வித்திடும்.. தன் குடும்பத்தில் நீண்ட காலத்திற்க்கு பிறகு நிம்மதியும் அமைதியும் நிலவும் .. வாகனம் அமைப்பு உருவாகும். இப்ப இருப்பதை விட வாழ்க்கை தரம் உயரும்.. இதெல்லாம் விட இதுவரை தடைகளை கொடுத்த விசயங்கள் முடிவுக்கு வரலாம்.

கடக_ராசி

கடக_ராசி

12 வருடங்களுக்கு பிறகு குரு சம சப்தம ஸ்தானத்தில் அமர்ந்து அவரின் நேர் கொண்ட பார்வையில் கடக ராசி . கடகம் அவரின் உச்ச வீடென்பதால் மிகவும் சாதகமான பலன்களே நடக்க வாய்ப்புகள் அதிகம். லாபத்தில் இருக்கும் ராகுவை குரு பார்க்க இருப்பதால் வளர்ச்சி ஒன்றே உங்களின் தாரக மந்திரமாக இருக்கும். அதீத தன்னம்பிக்கை வரும்.. சில காலங்களாக இருந்த மன கிலேசம் காணாமல் போய மனோ தைர்யம் பிறக்கும். இதனால உடல் ரீதியாக புத்துணர்வு வரும்...

சிம்ம_ராசி

சிம்ம_ராசி.

தொழில் மற்றும் வேலையில் மிக சிறந்ததொரு ஏற்றங்கள் வரலாம். வியாபாரத்தை விஸ்தீரணம் செய்யவும் வாய்ப்புகள் உருவாகலாம். எதிர்பாராத பதவி கிடைக்கலாம். உங்க பேச்சை கேட்க தானா சேர்ந்த கூட்டம் காத்திருக்கு. உபயோகித்துக்கொள்ளவும். மிக நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.. ரொம்ப நாட்களாக இழந்தது அது தான்.

கன்னி_ராசி

கன்னி_ராசி

குரு பார்வை படும் அனைத்து ஸ்தானங்களும் அற்புதம் . பாக்ய ஸ்தானத்தில் இருக்கும் ராகுவை குரு பார்க்க போவதால் அதிர்ஷ்டம் வீட்டு கதவை தட்டும்.. குரு தன் சிறப்பான நேர் கோண்ட பார்வையால் தன்னுடைய உ்ச்ச ராசியை பார்த்து செம்மை படுத்துவதால் எதிலும் வெற்றியை நோக்கிய லட்சியங்கள் நிறைவேறும். குரு உங்க ராசியை பார்ப்பதால் தாழ்வு மனப்பான்மை நீங்கும் .

துலா_ராசி

துலா_ராசி

கஎழுத ஆரம்பிக்கும் போதே ஒரு இனம் புரியாத சந்தோஷம். சுகம் மாத்ரு வாகன ஸ்தான கேந்திரத்தில் நண்பன் சனி ஆட்சியுடன் நீச பங்க ராஜ யோகம் தரும் அமைப்பு. குருவின் பார்வையால் தடைகள் தவிடுபொடியாகும். மிகவும் சிறப்பான பலன் என்னவென்றால் தொழில் வியாபாரம் வேலை இவற்றில் மிக குறிப்படதகுந்த ஏற்றம் இருக்கும். பிரசித்தி பெற்ற ஆலயம் செல்ல மனம் அலைபாயும். இறுதியாக தேவையில்லாத விரயங்கள் குறையலாம்.

விருச்சிக_ராசி

விருச்சிக_ராசி

கடந்த சில வருடங்களாக இந்த ராசியினர் பட்ட வேதனை எதிரிகளுக்கும் வர கூடாது.. இன்னிக்கு இந்த பதிவை படிக்கும் பொறுமையில் பூமாதேவியை மிஞ்சிய விருச்சிகராசியினருக்கு ஒரு மிகப்பெரிய வாழ்த்து. குரு பார்க்க கோடி நன்மை. அந்த சுப கிரகமான குருவின் பார்வை மிக சிறந்த ஸ்தான பலன்களான உங்க ராசியின் 7/9/11 இடங்களில் பதிவதால் ஒரே வரில சொல்லனும்னா ஆண்டவன் என்னிக்குமே நல்லவங்களை கைவிட மாட்டான்... இனி உங்க பொற்காலம் . மூன்றில் சனி ஆட்சி.. குரு பார்வை பலன்கள். நீங்க விதைத்ததெல்லாம் சிறப்பாக அறுவடை செய்யும் எதிர்காலம். தடை அதை உடை அல்லது தாண்டி எகிறி குதித்து போ..

தனுசு_ராசி

தனுசு_ராசி

அதிர்ஷ்ட சாலிங்க. ஜென்ம ராசில மூன்று கிரகங்கள் இணைவு. அதில் ஜென்ம சனி வேற ஒண்ணு. கீழ விழுந்தும் அதே வேகத்துல எழுந்து கொள்ளும் கிரக அமைப்பு டிசம்பர் முதல். தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் இரு பெரும் ராஜ கிரகங்கள் கூட்டணி... குரு பார்வையால் மறைவு ஸ்தானங்கள் பலமிழக்க உங்க சாதக பலம் கூடுது. ரொம்ப காலங்களாக வராமல் இருந்த தகுதிக்கேத்த நற்சான்றிதழ் கிடைக்கும்... பதவி உயர்வு சம்பள உயர்வு.நிச்சயம்.

மகர_ராசி

மகர_ராசி

ஜென்ம ராசியில் குரு வந்து நீசம் அடைவதும் பின்னர் ஜென்ம ராசியில் சனி ஆட்சி பொறுப்பேற்று நீச பங்கமடையவைப்பதும் அபூர்வ கிரக சூழ்நிலை. குரு பார்வையால் சிறப்பு பெறும் 5/7/9. ஸ்தானங்களால் பிள்ளைகள் மற்றும் வாழ்க்கை துணையால் சிறந்ததொரு சாதகமான பலன்கள் ஏற்படும் .. ஏழரை சனி என்றாலும் குருவுடன் சனியும் இணைய இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்றது போல பிரச்னைகள் விலகும். மிக சிறப்பாக பாக்ய ஸ்தான பலத்தை குரு பார்வை பலபடுத்துவதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்

கும்ப_ராசி

கும்ப_ராசி

30 வருடங்களுக்கு பிறகு உங்க ராசியதிபதி சனீஸ்வரர். அடு்த்த 5 வருடங்களுக்கு ஆட்சியில் அமர போகிறார். ஒத்திக்கோ வாடகைக்கோ அல்ல தடபுடலான வரவேற்பு கொடுக்க தயாராகுங்க.. குருவின் பார்வையில் சுக ஸ்தான கேந்திரத்தில் ராகு . வசதிகள் பெருக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். புத்திசாலித்தனமாக உபயோகித்துக்கொள்ளவும். எந்த துரோகி உங்களுக்கு கடந்த சில வருடங்களாக மன உளைச்சல் கொடுத்தானோ அவனே பலமிழந்து உங்களிடம் சரணடைவான். நீங்களே எதிர்பாராத மிகவும் சாதகமான விஷயம் உங்களுக்கு தேடி வரலாம் ..

மீன_ராசி

மீன_ராசி

உங்க ராசியதிபதி குரு லாபஸ்தானத்திற்க்கு பெயர்ச்சியாகி 30 வருடங்களுக்கு பிறகு ஆட்சிக்கு வரும் சனியுடன் இணையும் இரு ராஜ. கிரகங்களின் யோக கூட்டணி. அப்புறமென்ன மீன ராசிக்காரங்க கெத்தா இருக்க போறாங்க. குருவின் பார்வையில் முயற்சி ஸ்தானத்து ராகு. ஒடுங்க..வெற்றிகளிப்பில் ஓடுங்க .

களத்தர ஸ்தானத்தில் குரு பார்வையும் விழுந்து சனி பார்வையும் விலகுவதால். வாழ்க்கை துணயால் ராஜ யோகம் வரும் மிக சிறப்பு.

குருவின் நேர் கொண்ட சம சப்தம பார்வை தன் உச்ச வீடான கடக ராசி எனும் பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால். நம்மை சுத்தி மீன ராசிக்காரங்களை அன்பால மயக்கி கூட வெச்சிருந்தா யானை பலம்.

மேற்கூறிய அனத்தும் நேர்மறையானப் பொதுப் பலன்கள்.

அவரவர் திசா, புத்தி, உச்ச நீச்ச க்ரஹங்கள் மற்றும் செய்வினை செய்கருமத்தைச் சார்ந்து பலன்கள் வேறுபடும்.

வாழ்க வளமுடன்