எந்த ராசிக்கு எந்தக்கல் ராசியாக இருக்கும் சில தகவல்கள்!

Gemology

Gems

நட்சத்திரங்கள் 27 என்றாலும், அதன் பாகைகள் அதாவது பாதங்கள் ராசிக்கு 4 என மொத்தம் 108. ராசிகள் 12 என்பதால் ஒவ்வொரு ராசிக்கும் 9 பாதங்கள் எனக் கணக்கிடப்படுகின்றது.

ராசிக்கு ஒவ்வொரு கிரக பகவானும் அதிபதியாகத் திகழ்வார் என்பது ஜோதிட சாஸ்திரம். 12 ராசிக்கும் மொத்தம் 9 கிரகங்கள் மட்டுமே என்பதால் சில கிரகங்கள் 2 ராசிகளுக்கு அதிபதியாகத் திகழ்வது உண்டு. உதாரணமாக சுக்கிரனே ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதி ஆவார். இவருக்கு உரிய கல் வைரம்.

இதுபோலவே ஒவ்வொரு ராசி அதிபதிக்கும் உரிய கற்களைத் தேர்வு செய்து அது நம் உடலில் படுமாறு அணிந்தால் அதுவே ராசிக்கல்லாகி விடுகின்றது.

மேஷ_ராசி

மேஷ_ராசி

மேஷ ராசிக்காரர்களின் அதிபதி செவ்வாய். இவருக்கு விருப்பமான ரத்தினம் பவளம். மேஷம் ராசியினரும் செவ்வாய் திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம் . கடவுள் அருள் கிடைப்பதுடன் கோபத்தைக் குறைத்து மனதுக்கு அமைதி தரும்.

தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன் பதவி உயர்வுக்கு வழி செய்யும்.

ரிஷப_ராசி

ரிஷப_ராசி

முன்பே சொன்னது போல ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். இவருக்குரிய ரத்தினம் வைரம். சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம். இதை அணிந்திட வசதி வாய்ப்புகள் பெருகும்.

வெற்றியைத் தரும். வெளிநாடு களுக்குச் செல்லும் வாய்ப்பு தேடிவரும்.

மிதுன_ராசி

மிதுன_ராசி

மிதுன ராசிக்கு அதிபதி புதன். அவருக்கு உரியது மரகதம். புதன் திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். பொதுவாக அவரவர் ராசிக்கற்கள் அவரவருக்கு தொழில் விருத்தியைக் கொடுக்கும். இதில் புதன் தொழில்களின் அதிபதி என்பதால் மரகதம் அணிய அதிர்ஷ்டம் கூடுதலாகும்.

புதன் வித்யாபதி என்பதால், அவருக்கு உரிய மரகதம் அணிய கற்பனை வளம் பெருகி, கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.

நினைவாற்றல் பெருகும்.

கடக_ராசி

கடக_ராசி

கடக ராசிக்கு அதிபதி சந்திர பகவான். இவருக்கு உரியது முத்து. சந்திர திசை நடப்பவர்களும் முத்து அணியலாம். செல்வம் பெருகி அதனால் மகிழ்ச்சி ஏற்படும்.

தம்பதிகள் இடையே ஒற்றுமை ஏற்பட, நீண்ட ஆயுளைப் பெற, உறவுகள் மேம்பட முத்து அணியலாம்.

சிம்ம_ராசி

சிம்ம_ராசி.

சிம்ம ராசிக்கு அதிபதி சூரிய பகவான். இவருக்கு உரிய ரத்தினம் மாணிக்கம். சிம்ம ராசிக்காரர்களும் சூரிய திசை நடப்பவர்களும் மாணிக்கம் அணிவது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும்.

மன உறுதி மற்றும் தன்னம்பிக்கை தருவதுடன், கருத்து வேறுபாடுகளைப் போக்கும்.

கன்னி_ராசி

கன்னி_ராசி

கன்னி ராசிக்கும் அதிபதி புதன். அவருக்கு உரியது மரகதம். மிதுன ராசிக்குச் சொன்னதே இதற்கும் பொருந்தும்.

துலா_ராசி

துலா_ராசி

ஏற்கனவே சொன்னது போல, துலாம் ராசிக்கும் அதிபதி சுக்கிரனே. ரிஷபத்திற்குச் சொன்னதே இதற்கும் பொருந்தும். வைரம் அணிய வேண்டியது வைரம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணிய வாழ்வு சிறக்கும்.

விருச்சிக_ராசி

விருச்சிக_ராசி

விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய். மேஷத்திற்குக் கூறியதே இதற்கும். இந்த ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். கேது திசை நடப்பவர்களும் கூட இதனை அணியலாம். கேது ஆன்மீக காரகன். இதனை அணி்வதால் கடவுள் அருள் கிடைக்கும். ஞானம் தரும்.

தனுசு_ராசி

தனுசு_ராசி

தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். இவருக்கு உரிய ரத்தினம் கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். மன நிம்மதி தருவதுடன் செல்வ வளத்தைக் கொடுக்கும். சூழ்ச்சிகளில் இருந்து நம்மை விடுவிப்பதுடன் மன தைரியத்தை அதிகப்படுத்தும்.

மகர_ராசி

மகர_ராசி, கும்ப_ராசி

மகர ராசிக்கு அதிபதி சனி பகவான். கும்ப ராசி அதிபதியும் அவரே. சனி பகவானுக்கு உரிய ரத்தினம் நீலம். மேலும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம்.

இதை அணிவதன் மூலம் சமூகத்தில் செல்வாக்கு அதிகரிப்பதுடன், தெய்வீக சிந்தனையைத் தரும்.

நற்பண்புகளைத் தந்து உடல்பலத்தை அதிகரிக்கும் .

வழக்குகளில் வெற்றி பெற வைக்கும். ராகு திசை நடப்பவர்களும் நீலக்கல் அணிவதன் மூலம் செல்வ வளம் பெருகி சமூகத்தில் செல்வாக்கு உயரும்.

மீன_ராசி

மீன_ராசி

மீன ராசிக்கு அதிபதி குரு பகவானே. இந்த ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். தனுசு ராசிக்குக் கூறியதே இதற்கும்.

9 கிரகங்களில் 7 தானே சொல்லி இருக்கிறோம் என நீங்கள் யோசிக்கலாம். ராகு, ராசிகளின் அதிபதி கிடையாது. அதே சமயம், ராகு திசை நடக்கும் காலத்தில் கோமேதகமும், கேது திசை நடக்கும் காலத்தில் வைடூரியமும் அணிவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.

அந்தந்த ராசி அதிபதிகளின் ரத்தினங்களை நீங்களாகவே தேர்வு செய்தல் கூடாது. தசா புத்தி மற்றும் கிரகப் பெயர்ச்சிகளையும் கவனிக்க வேண்டும். தோஷமில்லாத ரத்தினங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதனை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ராசிக்கல் தேர்வுக்கு எங்களை அணுகலாம்.